சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/பொதுத் தேர்வுகளில் சாதனை படைத்த 500 மாணவர்களுக்கு 'கல்வி விருது' வழங்கி கௌரவிப்பு
செய்திகள்

பொதுத் தேர்வுகளில் சாதனை படைத்த 500 மாணவர்களுக்கு 'கல்வி விருது' வழங்கி கௌரவிப்பு

The News Outlook
🕒 19 ஜூலை, 2026, 09:04 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பொதுத் தேர்வுகளில் சாதனை படைத்த 500 மாணவர்களுக்கு 'கல்வி விருது' வழங்கி கௌரவிப்பு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

சிவகாசியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற 500 மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் 'கல்வி விருது விழா' மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிவகாசி மாநகராட்சியுடன் இணைந்து 'அன்பால் இணைவோம்' அறக்கட்டளை இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று, பொதுத்தேர்வுகளில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த சுமார் 500 மாணவ, மாணவிகள் இவ்விழாவிற்கு நேரில் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். சாதனை படைத்த மாணவர்களுக்குக் கல்வி விருதுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

'அன்பால் இணைவோம்' அறக்கட்டளையின் நிறுவனர் சதீஷ்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ் பிரியா ஆகியோர் கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்கு விருதுகளை வழங்கி தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...