விருதுநகர் மாவட்டத்தில் நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாடி நபியை முன்னிட்டு, ஆகஸ்ட் 26, 2026 அன்று ஒருநாள் மட்டும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளும் தற்காலிகமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் எப்.எல்-1, எப்.எல்-2, எப்.எல்-3, எப்.எல்-3A, எப்.எல்-3AA, எப்.எல்-11 உள்ளிட்ட மதுபான உரிமம் பெற்ற அனைத்து இடங்களையும் ஆகஸ்ட் 26-ம் தேதி மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் மற்றும் Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981 ஆகியவற்றின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மிலாடி நபி தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் வகையிலும், அரசு விதிகளின்படியும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரவை மீறினால் நடவடிக்கை
மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடும் டாஸ்மாக் கடைகள் மற்றும் எப்.எல் உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களின் உரிமதாரர்கள் மீது விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சித்தலைவர் சுகபுத்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே, ஆகஸ்ட் 26-ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் மதுபான விற்பனை நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

