சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/4 ஆண்டுகளாக நீடிக்கும் போராட்டம்: வீட்டுமனைப் பட்டா கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் திருநங்கைகள் மனு!*
செய்திகள்

4 ஆண்டுகளாக நீடிக்கும் போராட்டம்: வீட்டுமனைப் பட்டா கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் திருநங்கைகள் மனு!*

The News Outlook
🕒 13 ஜூலை, 2026, 11:33 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
4 ஆண்டுகளாக நீடிக்கும் போராட்டம்: வீட்டுமனைப் பட்டா கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம்  திருநங்கைகள் மனு!*

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

4 ஆண்டுகளாக நீடிக்கும் போராட்டம்: வீட்டுமனைப் பட்டா கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் திருநங்கைகள் மனு!* விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், சாத்தூர் பகுதியைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தினர் தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அமீர்பாளையம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் 20 நபர்களுக்கு கோயில் புலிகுத்தி பகுதியில் ஏற்கனவே அரசு சார்பில் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுவிட்டன. ஆனால், அங்கு தங்களுக்குப் போதிய இடம் இல்லை எனக் கூறி விடுபட்ட மீதமுள்ள 10 பேர், கடந்த 4 முதல் 6 ஆண்டுகளாகத் தங்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று தொடர்ந்து மனு அளித்து அலைந்து வருவதாகக் தெரிவிக்கின்றனர். மனு அளிக்க வந்த மூன்றாம் பாலினத்தினர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்களிடம் தற்போது குடும்ப அட்டை மட்டுமே உள்ளது. அதைத் தவிர்த்து, தமிழக அரசு வழங்கும் ₹1,000 மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தினருக்கான எந்தவொரு முறையான அரசு நலத்திட்ட உதவிகளும், உபகரணங்களும் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. வாழ்வாதாரத்திற்கே வழியின்றித் தவித்து வரும் எங்களுக்கு, சொந்தமாக ஒரு வீடு கட்டிக் கொள்ள வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த 2024-ஆம் ஆண்டிலிருந்தே அதிகாரிகளிடம் தொடர்ந்து மனுக்களைக் கொடுத்து வருகிறோம். ஆட்சியர்கள் மாறினாலும் எங்களது கோரிக்கை மனுக்கள் மீது இதுவரை எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தற்போதைய மாவட்ட ஆட்சியர் அவர்கள் எங்களது மனுவை உடனடியாகப் பரிசீலித்து, எங்களுக்குரிய இட ஒதுக்கீட்டின் கீழ் விரைந்து இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி, எங்களது வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்" என்று உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...