விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் இருந்து, விவிபேட் (VVPAT) காகிதச் சுருள்களை அகற்றும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சுகபுத்ரா இன்று தொடங்கி வைத்தார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்கின் பூட்டுகளை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சுகபுத்ரா, விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 7 சட்டமன்றத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மொத்தம் 2,001 விவிபேட் இயந்திரங்களில் இருந்தும் காகிதச் சுருள்களை அகற்றும் பணி இன்று முதல் தொடங்கி, தொடர்ந்து 7 நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவித்தார்.

