திருநெல்வேலி மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது ஆணையாளர் மோனிகா ராணா முன்னிலை வகித்தார் கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டு மக்கள் பிரச்சனை குறித்து பேசிக் கொண்டிருந்தனர் காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கிய நிலையில் 11:30 மணிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த 19வது வார்டு உறுப்பினர் அல்லா பிச்சை தமிழக வெற்றி கழகத்தின் கட்சி துண்டு அணிந்து வந்ததோடு விசில் அடித்தபடியும் அவைக்குள் வந்தார் இதற்கு திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது அல்லா பிச்சையை கூட்டத்தை விட்டு வெளியேற்ற வேண்டுமென திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பிய படி இருந்தனர் இதுகுறித்து மேயர் பேசும் போது தமிழக வெற்றி கழகத்தின் துண்டை அணிந்து வருவதில் எவ்வித பிரச்சனையும் இல்லை தொடர்ந்து கட்சியின் சின்னமான விசிலை ஊதியபடி இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார் இரண்டு முறை தொடர்ந்து விசில் ஊதிய போதும் மேயர் எச்சரிக்கை தொடர்ந்தது இந்த நிலையில் அல்லா பிச்சையின் தொடர்ந்து விசில் ஊதியப்படி இருந்ததால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைகளை மேயர் அறிவித்தார் அடுத்த இரண்டு மாதங்கள் நடைபெறும் மாமன்ற கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள கூடாது என அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடுகிறேன் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் மாமன்ற கூட்டங்களில் அல்லா பிச்சையை சஸ்பெண்ட் செய்வதாக மேயர் அறிவித்தார் இன்றைய கூட்டத்திலிருந்து அவர் வெளியேற வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் தொடர்ந்து வெளியே போ என்ற முழக்கத்தை எழுப்பியதால் பரபரப்பு நீடித்தது சாதாரண கூட்டத்தின் 15 தீர்மானங்களும் அவசர கூட்டத்தில் 78 தீர்மானங்களில் 70ஆவது தீர்மானம் நீங்கலாக 77 தீர்மானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக (ஆல் பாஸ்) மேயர் அறிவித்து கூட்டத்தை முடித்து வைத்தார் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்து கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர் அல்லா பிச்சையால் திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது கடந்த கூட்டத்தின் போது பேட்டை பகுதியில் 42 ஏக்கர் நிலத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பான தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது அதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் அனுமதி வழங்கும் தீர்மானம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது தற்போது தற்போது அந்த தீர்மானத்திற்கான சிக்கல் தீர்ந்ததால் அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது
செய்திகள்
மாநகராட்சி கூட்டத்தில் விசில் அடித்த தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் அல்லா பிச்சை சஸ்பெண்ட்!
The News Outlook
🕒 10 ஆக., 2026, 07:59 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
