சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact CheckCitizen ReporterReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/செய்திகள்/அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 14.08.2026 வரை கால நீட்டிப்பு.
செய்திகள்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 14.08.2026 வரை கால நீட்டிப்பு.

The News Outlook
🕒 5 ஆக., 2026, 11:54 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 14.08.2026 வரை கால நீட்டிப்பு.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 14.08.2026 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா அவர்கள் தகவல். ---- விருதுநகர் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் திருச்சுழியில் 2026-ம் ஆண்டிற்கான ஓராண்டு, ஈராண்டு தொழிற்பிரிவுகளில்பயிற்சியாளர்களின்நேரடிச்சேர்க்கை 31.07.2026 முடிய நடைபெற்றது. இச்சேர்க்கையில் பூர்த்தி செய்யப்பட்ட இடங்கள் போக காலியாகவுள்ள தொழிற்பிரிவுகளில் இன ஒதுக்கீடு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மதிப்பெண்களின் தரவரிசை அடிப்படையில் 14.08.2026 முடிய உரிய அசல் கல்விச்சான்றுகளை வழங்கி, நேரடிச்சேர்க்கையில் மாணவ, மாணவிகள் அதிகளவில் சேர்ந்து தொழிற்கல்வியினை பயின்று வேலை வாய்ப்பினை பெற்று பயன்பெறலாம். மேலும் இப்பயிற்சியில் ஓராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.185/-ம் மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவுக்கான கட்டணம் ரூ.195/-ம் நேரிடையாக செலுத்தப்பட வேண்டும். இந்நிலையத்தில் பயிற்சி பெறும் தகுதியுள்ள அனைத்து பயிற்சியாளர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி, கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை, மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750/- (வருகைக்கு ஏற்ப), சீருடை 2 செட் (தையல்கூலியுடன்) , மூடு காலணி 1 செட், பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள் மற்றும் பயிற்சியாளர் அடையாள அட்டை, இவற்றுடன் 6ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு முடிய அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பெறும் ஆண், பெண் பயிற்சியாளர்களுக்கு தமிழ்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை பெற்று வழங்கப்படும். இவ்வாய்ப்பினை 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதியுடைய 11, 12, பட்டய, பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத, இடைநின்ற மாணவ, மாணவியர் தொழிற்கல்வியினை பயின்று நல்ல ஊதியத்துடன் வேலை வாய்ப்பினை மத்திய/மாநில/ தனியார் அரசு தொழிற் நிறுவனங்களில் வேலைவாய்ப்பினைப் பெற வளாகத் தேர்வு மூலம் தெரிவு செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா அவர்கள் தெரிவித்துள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...