விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர் மற்றும் விருதுநகர் ஆகிய பகுதிகளை சுற்றி சுமார் 1200 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.இந்த பட்டாசு ஆலைகளில் சில சமயங்களில் விதிமீறல் நடக்கும் போதும்,அல்லது மருந்துக்கலவையில் திடீரென உராய்வு ஏற்படும் போதும் எதிர்பாரா விதமாக வெடிவிபத்து ஏற்பட்டு அப்பாவி உயிர்கள் பலியாகி வருகின்றன.நடப்பாண்டு இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர்.
இதனால் உயிரிந்தோரின் குடும்பம் நிற்கதியாகி நிற்கிறது. இந்த வரிசையில் விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியன்று விதிமீறி செயல்பட்ட வனஜா என்ற தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 24 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் இருந்த குழந்தைகளை மாவட்ட நிர்வாகம் மீட்டு அரசு சார்பில்,பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்கி வருகிறது.
தாய் அல்லது தந்தை இருவரில் ஒருவரை இழந்திருந்தால், மாதம் ரூ.2,000 வழங்கிவரும் நிலையில் இந்தக் குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் உரிய கல்வி செலவையும் முழுமையாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி தேற்றி நிம்மதியும் நம்பிக்கையும் தந்துள்ளார் விருதுநகர் எம்.எல்.ஏ செல்வம், இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், அரசு உதவிகளுடன் சேர்ந்து, ஆற்றலுள்ள வரை இந்த குழந்தைகளின் பள்ளி கட்டணங்கள், புத்தகங்கள்,சீருடைகள் மற்றும் மற்ற தேவையான கல்விச் செலவுகள் அனைத்தையும் தமிழக வெற்றிக் கழகம் தனது பொறுப்பாக ஏற்றுக்கொள்ளும் என்றார். இந்த அறிக்கை சமூக நலனுக்காக செயல்படும் அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் தங்கள் பங்கு புரிந்து அதிரடி செயற்பாடுகளை மேற்கொண்டால் பல குடும்பங்கள் மீண்டும் நம்பிக்கை பெற்றிடும் என்பதில் ஐயமில்லை. பேட்டி: எஸ்.பி. செல்வம் - விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் (தவெக)

