சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/தமிழ்நாடு/21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு

21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

🕒 24 ஆக., 2026, 11:45 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

AI Highlights

  • தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. மாவட்டங்களின் முழு பட்டியல் இதோ.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 24) அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அரியலூர், கடலூர், ஈரோடு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருவாரூர், திருச்சி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய 21 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதனிடையே, இன்று முதல் அடுத்த சில நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔