Settings

முகப்பு/விளையாட்டு/மல்லர் கம்பம் போட்டியில் கலக்கி விழுப்புரம் அரசு கல்லூரி மாணவர்! தவெக மாவட்டச் செயலாளர் நேரில் பாராட்டு!
விளையாட்டு

மல்லர் கம்பம் போட்டியில் கலக்கி விழுப்புரம் அரசு கல்லூரி மாணவர்! தவெக மாவட்டச் செயலாளர் நேரில் பாராட்டு!

🕒 24 அக்., 2026, 07:41 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மல்லர் கம்பம் போட்டியில் கலக்கி விழுப்புரம் அரசு கல்லூரி மாணவர்! தவெக மாவட்டச் செயலாளர் நேரில் பாராட்டு!
✨

AI Highlights

  • •திருச்சியில் நடந்த மாநில அளவிலான முதல்வர் கோப்பை மல்லர் கம்பம் போட்டியில் வெற்றி பெற்ற விழுப்புரம் அரசு கல்லூரி மாணவர் பகத்சிங், தவெக மாவட்டச் செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான முதல்வர் கோப்பை மல்லர் கம்பம் போட்டியில் வெற்றி பெற்ற விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி மாணவர், தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் மாவட்டச் செயலாளரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஏற்பாட்டில், திருச்சி மாவட்ட விளையாட்டு அரங்கில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான முதல்வர் கோப்பை மல்லர் கம்பம் போட்டிகள் கடந்த 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.

இப்போட்டிகளின் ஆண்கள் பிரிவில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர் பகத்சிங் பங்கேற்று வெற்றி பெற்றார். இப்போட்டியில் சிறப்பிடம் பிடித்த மாணவருக்குக் கல்லூரி முதல்வர் மாதலி மற்றும் உடற்கல்வி இயக்குநர் ஜோதிபிரியா ஆகியோர் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், வெற்றி பெற்ற மாணவர் பகத்சிங், தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் தென்மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் வடிவேலை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔