பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் தனியார் கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இப்போட்டிகளில் 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் ஆண் மற்றும் பெண் இருபாலரும் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் இருந்து ஆடவர் பிரிவில் 12 அணிகள் மற்றும் மகளிர் பிரிவில் 12 அணிகள் என மொத்தம் 24 அணிகள் இப்போட்டியில் கலந்துகொண்டன.
இதில் முதலிடம் பெறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்குப் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

