Settings

முகப்பு/விளையாட்டு/காமன்வெல்த் கபடி போட்டி இந்திய அணிக்கு திருச்சியை சேர்ந்த மாணவர் தேர்வு!
விளையாட்டு

காமன்வெல்த் கபடி போட்டி இந்திய அணிக்கு திருச்சியை சேர்ந்த மாணவர் தேர்வு!

🕒 20 அக்., 2026, 12:46 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
காமன்வெல்த் கபடி போட்டி இந்திய அணிக்கு திருச்சியை சேர்ந்த மாணவர் தேர்வு!
✨

AI Highlights

  • •காமன்வெல்த் கபடி போட்டி இந்திய அணிக்கு திருச்சியை சேர்ந்த மாணவர் தேர்வு!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

2026-ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில், திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் எஸ். தீபக் (21) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்போட்டி குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள வீர் சாவர்க்கர் விளையாட்டு வளாகத்தில் அக்டோபர் 21 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் 14 பேர்கொண்ட இந்திய மூத்தோர் (சீனியர்) கபடி அணியில், தமிழ்நாடு சார்பில் தேர்வாகியுள்ள ஒரே வீரர் தீபக் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி காட்டூர் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகனான தீபக், திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். கபடிப் போட்டியில் இடது கார்னர் பகுதியில் தடுப்பாட்ட வீரராக சிறப்பாக செயல்படக்கூடியவர் தீபக். இவர் முன்னதாக பாரதிதாசன் பல்கலைக்கழக மண்டல அளவிலான போட்டிகள், புரோ கபடி மற்றும் மாநில அளவிலான மூத்தோர் பிரிவுப் போட்டிகளில் தனது சிறந்த திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவர், தற்போது சர்வதேச அளவில் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இந்திய அணியில் இடம்பெற்று சாதனை படைத்துள்ள மாணவர் எஸ். தீபக்கிற்கு கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔