Settings

முகப்பு/விளையாட்டு/ரஷ்யாவில் கொடிகட்டிய திருப்பத்தூர் மாணவி!
விளையாட்டு

ரஷ்யாவில் கொடிகட்டிய திருப்பத்தூர் மாணவி!

🕒 13 அக்., 2026, 09:47 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ரஷ்யாவில் கொடிகட்டிய திருப்பத்தூர் மாணவி!
✨

AI Highlights

  • •சர்வதேச செஸ் போட்டியில், இந்தியாவின் சார்பில் பங்கேற்று, 2 தங்க,2 வெள்ளி பதக்கங்களையும் வென்ற கனவு ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றார்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ரஷ்யாவில் நடைபெற்ற 20-வது ஆசிய பள்ளிகள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், திருப்பத்தூரைச் சேர்ந்த மாணவி யாக்ஷினி இரண்டு தங்கப் பதக்கங்களும், இரண்டு வெள்ளிப் பதக்கங்களும் வென்று சாதனை படைத்துள்ளார்.

ரஷ்யாவின் துலா நகரில் அக்டோபர் 1 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த சர்வதேச செஸ் போட்டியில், அவர் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

வெற்றி பெற்ற மாணவி யாக்ஷினி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் வே.நல்லசிவன் அவர்களை நேரில் சந்தித்து, தான் வென்ற பதக்கங்களைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். இந்நிகழ்வின்போது மாணவியின் பெற்றோரும், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஜெயகுமாரி உடனிருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔