சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/விளையாட்டு/நவீன ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சி மையம்: உறுப்பினர் சந்தா கட்டணம் திருத்தம் – ஆட்சியர் சுகபுத்ரா தகவல்
விளையாட்டு

நவீன ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சி மையம்: உறுப்பினர் சந்தா கட்டணம் திருத்தம் – ஆட்சியர் சுகபுத்ரா தகவல்

🕒 31 ஆக., 2026, 10:34 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நவீன ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சி மையம்: உறுப்பினர் சந்தா கட்டணம் திருத்தம் – ஆட்சியர் சுகபுத்ரா தகவல்

AI Highlights

  • விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் செயல்படும் நவீன குளிரூட்டப்பட்ட ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சி மையத்தின் உறுப்பினர் சந்தா கட்டணம் செப்டம்பர் 1 முதல் திருத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் செயல்பட்டு வரும் நவீன குளிரூட்டப்பட்ட ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சி மையத்திற்கான உறுப்பினர் சந்தா கட்டணம் திருத்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் செயல்பட்டு வந்த உடற்பயிற்சி கூடம் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு குளிரூட்டப்பட்ட ஜிம்னாஸ்டிக் உடற்பயிற்சி மையமாக மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மையம் கடந்த 30.08.2025 முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது.

அனைத்து வயதினரின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில், மேம்படுத்தப்பட்ட நவீன உடற்பயிற்சி உபகரணங்களுடன் இந்த மையம் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக உறுப்பினர் சந்தா கட்டணத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமையகம் திருத்தி அமைத்துள்ளது.

அதன்படி, 01.09.2026 முதல் புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது.

  • 1 மாதம்: ரூ.525
  • 3 மாதங்கள்: ரூ.1,260
  • 6 மாதங்கள்: ரூ.2,310
  • 1 ஆண்டு: ரூ.4,410

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பயிற்சியாளர் மூலம் உடற்பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.

மேலும், இந்த நவீன உடற்பயிற்சி கூடத்தை பயன்படுத்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மேற்கண்ட கட்டணத்தில் 50 சதவீத சலுகை வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔