விழுப்புரம் மாவட்டம், பாணாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 'ஓடி விளையாடு' அமைப்பின் நிறுவனர் திரு. செந்தமிழ் அன்பு, 'மிஷன் ஒலிம்பிக் 2036' திட்டத்தின் கீழ் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) திட்ட அலுவலராக (Project Officer) நியமிக்கப்பட்டுள்ளார்.
கிராமப்புற மாணவர்களின் விளையாட்டுத் திறன்களைக் கண்டறிந்து, அவர்களை ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயார்படுத்தும் நோக்கில் தொடர்ந்து பணியாற்றி வரும் செந்தமிழ் அன்பின் சமூகப் பங்களிப்பிற்கு, இந்த அரசுப் பொறுப்பு ஒரு முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
புதிய பொறுப்பேற்றுள்ள செந்தமிழ் அன்பு, தமிழக விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கும், கிராமப்புற இளம் வீரர்களின் முன்னேற்றத்திற்கும், குறிப்பாக 2036 ஒலிம்பிக் கனவை நனவாக்கும் முயற்சியிலும் பெரும் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரது நியமனத்திற்கு 'மனிதம் காப்போம்' அறக்கட்டளை தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.









