விழுப்புரம் நகராட்சி கீழ்பெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கத்தில், அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையேயான 3-வது தடகள விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான், போட்டிகளைத் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர்.
தொடக்க விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை தலைவர் மற்றும் இயக்குநர் முனைவர் க. சிவக்குமார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஆழிவாசன், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் ஆ. மாதவி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.









