ஆரணியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில், தேவலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இப்போட்டியில் மாணவிகள் பிரிவில் 9ஆம் வகுப்பு மாணவி சுபாஷினி முதலிடமும், 7ஆம் வகுப்பு மாணவி மோஷிதா மூன்றாம் இடமும் பிடித்தனர். மேலும், 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் 8ஆம் வகுப்பு மாணவன் கௌசிக் இரண்டாம் பரிசும், 12 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் 7ஆம் வகுப்பு மாணவன் சுஜித் பரிசுகளையும் வென்றனர்.
மாநில அளவில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ-மாணவிகளை, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், துணைத் தலைவர், பொருளாளர் வெங்கடேசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோர் நேரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.









