Settings

முகப்பு/ஆன்மீகம்/ஸ்ரீ பட்டத்தரசியம்மன் கோவில் பொங்கல் விழா: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்புடன் முளைப்பாரி ஊர்வலம்!
ஆன்மீகம்

ஸ்ரீ பட்டத்தரசியம்மன் கோவில் பொங்கல் விழா: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்புடன் முளைப்பாரி ஊர்வலம்!

🕒 8 அக்., 2026, 04:43 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஸ்ரீ பட்டத்தரசியம்மன் கோவில் பொங்கல் விழா: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்புடன் முளைப்பாரி ஊர்வலம்!
✨

AI Highlights

  • •விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி ஸ்ரீ பட்டத்தரசியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற முளைப்பாரி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி பீரமலைக்கள்ளர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பட்டத்தரசியம்மன் திருக்கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு, முளைப்பாரி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பீரமலைக்கள்ளர் சமூகத்திற்குப் பாத்தியப்பட்ட இக்கோவிலின் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த 29-ஆம் தேதி முளைப்பாரி போடுவதோடு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கரகம் எடுத்தல் மற்றும் பொங்கல் வைக்கும் வைபவங்கள் நடைபெற்றன. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவை முன்னிட்டு, காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாகச் சென்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான முளைப்பாரி ஊர்வலம் இன்று மாலை நடைபெற்றது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து ஸ்ரீ பட்டத்தரசியம்மன் கோவிலை அடைந்தனர். அங்கு முளைப்பாரி கரைக்கும் வைபவம் நடைபெற்றது. 'ஓம் சக்தி' கோஷம் முழங்கிய இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளைப் பீரமலைக்கள்ளர் சமூகப் பெரியோர்களும், விழா கமிட்டியினரும் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔