மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் தைலக்காப்பு திருமஞ்சன நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்வையொட்டி, அழகர் மலை மீது அமைந்துள்ள நூபுரகங்கை தீர்த்தத் தொட்டியில் கள்ளழகர் பெருமானுக்குச் சிறப்புத் தைலம் சாத்துபடி மற்றும் திருவாராதனம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருமஞ்சன தீர்த்தவாரி நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழிபாட்டு நிகழ்வில், மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

