Settings

முகப்பு/ஆன்மீகம்/சொக்கநாதர் அம்பு எய்து அசுரர்களை வதம் செய்த நிகழ்ச்சி - கோலாகலமாக நிறைவடைந்த நவராத்திரி!
ஆன்மீகம்

சொக்கநாதர் அம்பு எய்து அசுரர்களை வதம் செய்த நிகழ்ச்சி - கோலாகலமாக நிறைவடைந்த நவராத்திரி!

🕒 20 அக்., 2026, 08:38 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சொக்கநாதர் அம்பு எய்து அசுரர்களை வதம் செய்த நிகழ்ச்சி - கோலாகலமாக நிறைவடைந்த நவராத்திரி!
✨

AI Highlights

  • •விருதுநகரில் ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு வன்னி மரத்தை வலம் வந்து அம்பு எய்தும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகரில் நவராத்திரி திருவிழாவின் பத்தாவது நாளான இன்று, ஆன்மீக பக்தி பரவசத்துடன் விஜயதசமி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.விழாவின் முக்கிய நிகழ்வாக, ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயிலில் சுவாமி சந்திரசேகர் வேடத்தில் சிறப்பு அலங்காரத்தில் தங்க குதிரையில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து, வன்னி நந்தவனத்தில் வன்னி மரத்தை மங்கல வாத்தியங்கள் முழங்க வலம் வந்த சுவாமி, தீய சக்திகளையும் அசுரர்களையும் அழிக்கும் ஐதீகத்தின்படி நான்கு புறமும் அம்பு எய்து அசுரர்களை வீழ்த்தும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வின் மூலம் இந்த ஆண்டிற்கான நவராத்திரி திருவிழா கோலாகலமாக நிறைவுபெற்றது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔