ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழாவின் நிறைவு நாளான புதன்கிழியன்று, சுவாமி மற்றும் அம்பாள் வன்னி மரத்திற்கு அம்பு எய்யும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 10-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி, 11-ஆம் தேதி முதல் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. விழாவின் 11-ஆம் நாளான புதன்கிழமை வன்னி நோம்பு தரவையில் அம்பு எய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி, மாலை 4 மணிக்கு ராமநாதசுவாமி கோயிலில் இருந்து சுவாமி தங்க குதிரை வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பட்டு வன்னி நோம்பு தரவைக்கு எழுந்தருளினர். அங்கு கோயில் குருக்கள் கிரிஷோசி தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அம்பு எய்யும் திருக்கூத்து திருநிறை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கோயில் இணை ஆணையர் சுரேஷ், உதவி ஆணையர் ரவீந்திரன், பேஸ்கார்கள் கமலநாதன், ராமகிருஷ்ணன், சர்வ சாதகம் அருணாச்சலம் உள்ளிட்ட கோயில் பணியாளர்களும், திரளான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
