தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய ஆன்மிகத் தலங்களில் கோயிலின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும், பக்தர்களின் அமைதியான தரிசனத்தை உறுதி செய்யவும் செல்போன் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் அருள் தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலிலும் இன்று முதல் (01.09.2026) கோயில் வளாகத்திற்குள் செல்போன்களைப் பயன்படுத்துவதற்குப் பயன்பாட்டுத் தடை முழுமையாக அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய நடைமுறையின் படி, கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது கைபேசிகளை உட்செல்வதற்கு முன்பாகவே ஒப்படைக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதற்கட்டமாக சுவாமி சன்னதி நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பாதுகாப்பு பெட்டகத்தில் பக்தர்கள் தங்களது செல்போன்களைப் பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்லுமாறு திருக்கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக ஒரு செல்போனுக்கு 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது சுவாமி சன்னதி முன்பாக மட்டும் இந்த பாதுகாப்பு பெட்டக வசதி தொடங்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்களின் கூட்ட நெரிசலைக் குறைக்கவும் வசதியைப் பெருக்கவும் வரும் காலங்களில் கோயிலின் அனைத்து நுழைவாயில்களிலும் இத்தகைய பாதுகாப்பு பெட்டகங்கள் விரிவாக்கம் செய்யப்படும் என திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் இந்த அறிவிப்புக்கு பக்தர்களும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்
ஆன்மீகம்
நெல்லையப்பர் கோயிலில் இன்று முதல் கோவில் வளாகத்தில் செல்போன் முற்றிலும் பயன்படுத்த தடை!
🕒 1 செப்., 2026, 03:33 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
