ஆன்மீக சிறப்புப் பயணமாக ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ள ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் புலிப்பாணி சுவாமிகளுக்கு, அந்நாட்டில் செயல்பட்டு வரும் சிவ ஆதீனம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜப்பான் சென்றடைந்த புலிப்பாணி சுவாமிகளை சிவ ஆதீனம் சார்பில் ஆன்மீக அன்புடனும் மரியாதையுடனும் வரவேற்றனர். தொடர்ந்து, பாரம்பரிய முறைப்படி அவருக்கு சிறப்பு வரவேற்பு நிகழ்வும் நடைபெற்றது.
இதையடுத்து நடைபெற்ற சந்திப்பில், இரு ஆதீனங்களின் ஆன்மீகப் பணிகள், சைவ சமயத்தின் வளர்ச்சி, தமிழர் மரபுகளுக்கும் சைவ நெறிக்கும் இடையிலான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக கருத்துகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி மண்ணில் இருந்து ஜப்பான் வரை சைவமும் ஆன்மீகமும் இணையும் வகையில் அமைந்துள்ள இந்தப் பயணம், பக்தர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கிடையிலான ஆன்மீக மற்றும் சைவ மரபுத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

