அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாண்டவன் குளம் கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோயிலில் ஷாரதா நவராத்திரி திருவிழா பக்தி கோலாகலத்துடன் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
விழாவின் ஒரு பகுதியாக, அம்மனுக்கு 16 வகையான மங்களப் பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன. இதன்பின்னர், அம்மன் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்குக் காட்சி அளித்தார்.
நவராத்திரி விழாவில் ஸ்ரீ லலிதாம்பிகை திருக்கோலத்தில் எழுந்தருளிய அம்மன், யானை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பாரம்பரிய மேளதாள முழக்கங்கள், சக்தி கரகம் மற்றும் வண்ண விளக்குகளுடன் நடைபெற்ற இந்த ஊர்வலம் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.

