Settings

முகப்பு/ஆன்மீகம்/நவராத்திரி திருவிழா: அன்னபூரணி அலங்காரத்தில் ஜொலித்த பெரிய மாரியம்மன்!
ஆன்மீகம்

நவராத்திரி திருவிழா: அன்னபூரணி அலங்காரத்தில் ஜொலித்த பெரிய மாரியம்மன்!

🕒 13 அக்., 2026, 05:43 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நவராத்திரி திருவிழா: அன்னபூரணி அலங்காரத்தில் ஜொலித்த பெரிய மாரியம்மன்!
✨

AI Highlights

  • •விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா: அன்னபூரணி அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ பெரிய மாரியம்மன் பக்தர்கள் சாமி தரிசனம்..

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் நவராத்திரி இரண்டாம் நாள் திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீ பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, அன்னபூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோயிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

இதையொட்டி, பத்து நாட்களும் ஸ்ரீ பெரிய மாரியம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்மன் அலங்காரங்கள் செய்யப்பட்டு, பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழாவின் இரண்டாம் நாளான இன்று, ஸ்ரீபெரிய மாரியம்மன் அன்னபூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து, பெரிய மாரியம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔