திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஏற்றப்பட்ட மகா தீபம், 3-வது நாளாக மலை உச்சியில் தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் அன்று மாலை மலை உச்சியில் ஏற்றப்பட்டது. வழக்கம்போல், இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்களுக்குக் காட்சி அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தீபம் ஏற்றப்பட்டு 3 நாட்களாகியும் மலை உச்சியில் மகா தீபம் ரம்மியமான தோற்றத்துடன் காட்சியளிப்பதுடன், பக்தர்களின் கண்களுக்குப் பரவசத்தைத் தந்து வருகிறது.
ஆன்மீகம்
மலை உச்சியில் 3-வது நாளாக தொடரும் மகா தீபம்!
🕒 26 நவ., 2026, 07:27 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் மகா தீபம், மலை உச்சியில் 3-வது நாளாக தொடர்ந்து ரம்மியமாக எரிந்து வருகிறது.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








