பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற கொலு விழாவின் ஒரு பகுதியாக, மஹா சண்டி ஹோமம் மற்றும் நெய்குள தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கடந்த 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் கொலு வைத்தல் நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், மஹா சண்டி ஹோமம் நடைபெற்றது. ஹோமத்தில் வேத மந்திரங்கள் முழங்க, உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, அம்மனுக்கு 18 வகையான மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிரசித்தி பெற்ற நெய்குள தரிசனத்தில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

