சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/ஆன்மீகம்/முருகன் கோவிலில் மரகத சிலை திருட்டு: போலீஸார் விசாரணை
ஆன்மீகம்

முருகன் கோவிலில் மரகத சிலை திருட்டு: போலீஸார் விசாரணை

🕒 2 செப்., 2026, 06:43 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
முருகன் கோவிலில் மரகத சிலை திருட்டு: போலீஸார் விசாரணை

AI Highlights

  • செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருக்கரணை மலைக்கோவிலில் பூட்டை உடைத்து மரகத முருகன் சிலை திருடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருக்கரணை கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள மரகத பாலதண்டாயுதபாணி முருகன் கோவிலில் இருந்த மரகத சிலை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெருக்கரணை கிராமத்தில் உள்ள மலைக்கோவிலில் மரகத பாலதண்டாயுதபாணி முருகன் சிலை இருந்துள்ளது. இந்நிலையில், கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த மரகத முருகன் சிலையை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

கோவிலில் சிலை காணாமல் போனதை அறிந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். திருடப்பட்ட சிலை பல கோடி ரூபாய் மதிப்புடையதாக கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்து சித்தாமூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், கோவில் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிலை திருட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்தும், சிலை எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கோவில் சிலைக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் ரீதியாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔