மைசூர் தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாக பிரம்மாண்டமாக நடைபெறுவது பாளையங்கோட்டை தசரா திருவிழாவாகும். இத்தகைய தசரா திருவிழா பாளையங்கோட்டையில் பிரசித்தி பெற்ற பன்னிரண்டு அம்மன் கோவில்களில் பிரதான அம்மன் கோவிலான பாளையங்கோட்டை ஆயிரத்து அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக கோவில் இருந்து கொடி பட்டம் யானை வாகனத்தின் மீது அலங்கரித்து வைக்கப்பட்டு பாளையங்கோட்டை முக்கிய நகர் வீதிகளில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது தொடர்ந்து கோவிலுக்கு வந்த கொடிபட்டத்திற்கு மகாதீபாராதனை நடத்தப்பட்டது. பின்னர் ஆயிரத்தம்மன் கோவில் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க மேளதாளம் இசைக்க தசரா திருவிழா கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கியது தொடர்ந்து கொடிமரத்திற்கு மஞ்சள் பால் தேன் இளநீர் சந்தனம் உள்ளிட்ட அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனையும் நடைபெற்றது ஆயிரத்தம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றதை தொடர்ந்து பாளையங்கோட்டை நகர் பகுதியில் உள்ள 12 அம்மன் கோவில்களிலும் தசரா திருவிழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரம் செய்யப்பட்ட மகா தீபாராதனையும் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் வரும் 21- ந்தேதி பாளையங்கோட்டை எருமைகடா மைதானத்தில் சூரசம்ஹாரம் நடக்கிறது .
ஆன்மீகம்
தசரா திருவிழா ஆயிரத்தம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது!
🕒 10 அக்., 2026, 09:18 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •பிரசித்தி பெற்ற நெல்லை பாளையங்கோட்டை தசரா திருவிழா நகரின் பிரதான தெய்வமான ஆயிரத்தம்மன் திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது. தொடர்ந்து பாளையங்கோட்டை பகுதியில் உள்ள 12 அம்மன் கோவில்களிலும் தசரா திருவிழா சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
