உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா வரும் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
ஆண்டு பெருவிழாவையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தின் கோபுரங்கள் மற்றும் வளாகம் முழுவதும் பல்வேறு வண்ணங்களில் ஒளிரும் வகையில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் பேராலயத்தின் அழகிய தோற்றம் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
குவியும் பக்தர்கள்
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான கொடியேற்ற விழா மற்றும் தேர்ப் பவனியில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
இதனால் பேராலய வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திருவிழா களைகட்டியுள்ளது.
இரவில் கண்கவர் தோற்றம்
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேராலயம் இரவு நேரத்தில் கண்கவர் தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இதனை பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசிப்பதுடன், தங்களது செல்போன்களில் புகைப்படங்கள் மற்றும் செல்பிகளையும் எடுத்து வருகின்றனர்.
மேலும், வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வேளாங்கண்ணி பேராலயத்தின் அழகிய காட்சிகள் டிரோன் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகின்றன.

