Settings

முகப்பு/அரசியல்/திருப்பூர் சுற்றுலா வளர்ச்சி: திருமூர்த்தி அணைக்கு ரூ.19 கோடி நிதி
அரசியல்

திருப்பூர் சுற்றுலா வளர்ச்சி: திருமூர்த்தி அணைக்கு ரூ.19 கோடி நிதி

🕒 24 அக்., 2026, 02:29 PM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
திருப்பூர் சுற்றுலா வளர்ச்சி: திருமூர்த்தி அணைக்கு ரூ.19 கோடி நிதி
✨

AI Highlights

  • •உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு உடுமலை கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி. திருமூர்த்தி அணை மேம்பாட்டுக்கு ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

உடுமலைப்பேட்டை: உலக சுற்றுலா தினம்–2026ஐ முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில், உடுமலைப்பேட்டை ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில் சுற்றுலா விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் பி. கற்பகவள்ளி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொருளாதாரத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜி. வைஷ்ணவி வரவேற்றார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாவட்ட சுற்றுலா அலுவலர் த. அரவிந்தகுமார், இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் சுற்றுலா வளர்ச்சி, பொருளாதார முக்கியத்துவம், வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்முனைவோர் வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை, திருமூர்த்திமலை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதன் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும் என மாவட்ட சுற்றுலா அலுவலர் தெரிவித்தார். திருமூர்த்தி அணை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்தத் தமிழக அரசு ரூ.19 கோடி ஒதுக்கியுள்ளதையும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் அதிகரிப்பதுடன், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் கருப்பொருளான சுற்றுலாவை மறுவடிவமைப்பதற்கான டிஜிட்டல் செயல்திட்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, சமூக ஊடகங்களின் பயன்பாடு மற்றும் சுற்றுலாத் தொழிலில் உள்ள புதிய வாய்ப்புகள் குறித்து விளக்கப்பட்டது.

இதில் சுற்றுலாத் துறை மற்றும் தொழில்முனைவோர் சார்ந்த பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

மேலும், மாணவிகளுக்காக ஓவியம், கட்டுரை மற்றும் செயற்கை நுண்ணறிவு காணொளிப் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. வரலாற்றுத் துறை ஆய்வு மாணவி விஷ்ணுப்ரியா நன்றியுரை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி சுற்றுலா அலுவலர் கீதா ராணி மற்றும் ஆசிரியர் ஜவஹர் ஆகியோர் கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொண்டனர். இதில் பேராசிரியர்கள், மாணவிகள், சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் தொழில்முனைவோர் கலந்து கொண்டனர்.

சுற்றுலாத் தலங்களைப் பாதுகாத்தல், பொறுப்பான சுற்றுலாவை ஊக்குவித்தல் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தும் நிகழ்வாக இது அமைந்தது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔