Settings

முகப்பு/அரசியல்/டெங்குவால் 4 வயது சிறுவன் உயிரிழப்பு: சோகத்தில் குடும்பம்
அரசியல்

டெங்குவால் 4 வயது சிறுவன் உயிரிழப்பு: சோகத்தில் குடும்பம்

🕒 24 அக்., 2026, 03:06 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
டெங்குவால் 4 வயது சிறுவன் உயிரிழப்பு: சோகத்தில் குடும்பம்
✨

AI Highlights

  • •திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு ஷாக் சிண்ட்ரோம் பாதிப்பால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கோயம்புத்தூர்: திருப்பூர் மாவட்டம், குருக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நான்கு வயது ஆண் குழந்தை டெங்கு ஷாக் சிண்ட்ரோம் மற்றும் செப்சிஸ் பாதிப்பால் கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

பிரவீன் குமார் என்பவரின் மகனான தமிழுக்கு, கடந்த 20.10.2026 அன்று காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, திருப்பூரில் உள்ள ஸ்ரீ ரகமணி கிளினிக்கில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது மேற்கொள்ளப்பட்ட ரத்தப் பரிசோதனையில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை 6,900 ஆகவும், தட்டணுக்கள் 2.56 லட்சமாகவும் இருந்ததாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து காய்ச்சல் நீடித்ததால், 21.10.2026 மற்றும் 22.10.2026 ஆகிய தேதிகளில் அதே கிளினிக்கில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, நரம்பு வழியாக திரவங்களும் செலுத்தப்பட்டன. பின்னர் மேற்கொள்ளப்பட்ட ரத்தப் பரிசோதனையில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை 2,400 ஆகவும், தட்டணுக்கள் 1.37 லட்சமாகவும் குறைந்திருந்தன.

குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, திருப்பூரில் உள்ள எஸ்.வி. கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு ரத்த ஓட்டச் சீர்குலைவு மற்றும் இரத்தத் தட்டணுக்கள் குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் கண்டறியப்பட்டதாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. டெங்கு பரிசோதனையிலும் NS1 ஆன்டிஜன் பாசிட்டிவ் எனத் தெரியவந்தது.

இதையடுத்து, குழந்தை கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. 23.10.2026 அன்று அதிகாலை 1.18 மணிக்கு அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. செயற்கை சுவாசம், மருந்துகள் மற்றும் ரத்த ஓட்டத்தைச் சீராக்குவதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அதே நாள் மாலை 7.35 மணிக்கு குழந்தை உயிரிழந்தது.

மருத்துவமனையின் இறப்பு அறிக்கையில், “டெங்கு ஷாக் சிண்ட்ரோம் / செப்சிஸ் வித் டிஐசி” (Dengue Shock Syndrome / Sepsis with DIC) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 19 மணி நேரத்தில் உயிரிழந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔