Settings

முகப்பு/அரசியல்/இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் முன்னணி கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
அரசியல்

இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் முன்னணி கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

🕒 9 அக்., 2026, 11:35 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் முன்னணி கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
✨

AI Highlights

  • •இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் முன்னணி நெல்லையில் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள ஏழு தொகுதிகளில் தாராபுரம் மதுராந்தகம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு கடந்த ஆறாம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில் மதுராந்தகம் தொகுதியில் காலையில் இருந்தே தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மரகதம் குமரவேல் தொடர்ந்து முன்னணியில் உள்ளார் அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார் தாராபுரம் தொகுதியில் ஆரம்ப சுற்றுகளில் அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சத்தியபாமா தனக்கு அடுத்தபடியாக வந்துள்ள திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் சுகன்யாவை விட கூடுதல் வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார் இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்காக வேட்பாளர்கள் வெற்றி முகத்தில் உள்ள நிலையில் அக்கட்சியினர் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் ராஜகோபால் தலைமையில் பட்டாசுகள் வெடித்து அப்பகுதியில் சென்று கொண்டிருந்த பொது மக்களுக்கும் பேருந்தில் பயணித்த பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர் இரண்டு தொகுதிகளும் அதிமுக வசம் இருந்து நிலையில் தற்போது தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்கள் முன்னணியில் உள்ளதால் இருவரும் வெற்றி பெற்றால் சட்டப்பேரவையில் தமிழக வெற்றி கழகத்தின் பலம் 109 ஆக உயரும் இந்த நிகழ்வில் பிரதீப் உள்ளிட்ட ஏராளமானோர் தொண்டர்கள் உடன் இருந்தனர்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔