புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வருவாய்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் வந்து கலந்து கொண்டு 1400 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் சிறந்த முறையில் களம் காண்பார் வெற்றி பெறுவார். தமிழ்நாடு முதலமைச்சர் தளபதிக்கு பின்னால் இருந்து பணி செய்வார் என்று பேசினார். அரசு விழாவில் இது போல் பேசுகிறீர்கள். விராலிமலையில் விஜயபாஸ்கர் தான் வேட்பாளர் என்று உறுதி செய்து விட்டீர்களா என்று கேட்டபோது அதை மறுத்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் அவர் களத்தில் இருந்து சிறந்த முறையில் தேர்தல் பணி செய்வார் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார் என்று தான் சொன்னேன் தவிர இரண்டையும் செய்தியாளர்கள் முடிச்சு போட்டு பார்க்க கூடாது என்று பல்டி அடித்தார். இவரது இந்த இரு விதமான பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசியல்
விராலிமலை விழாவில் அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சு: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
🕒 21 அக்., 2026, 04:00 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
✨
AI Highlights
- •விராலிமலையில் வருவாய்த்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
