நாகூர் ஆண்டவர் கந்தூரி விழாவிற்கான சந்தனக் கட்டைகளை தர்கா நிர்வாகத்திடம் ஒப்படைக்காமல், வேறு நபர் மூலம் வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறி விழுப்புரம் நகரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகூர் ஆண்டவர் கந்தூரி விழாவிற்கான சந்தனக் கட்டைகளை பாரம்பரிய முறைப்படி தர்கா நிர்வாகத்திடம் முதலமைச்சர் வழங்குவது வழக்கம். ஆனால், இந்த முறை தர்கா நிர்வாகத்திற்கு சம்பந்தம் இல்லாத நபர் மூலம் சந்தனக் கட்டைகளை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு தர்கா நிர்வாகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அரசின் இந்த நடவடிக்கைக்கு முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக விழுப்புரம் நகரில் டிஎன்ஏ விழுப்புரம் மத்திய மாவட்டம் சார்பில் கண்டனப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

