Settings

முகப்பு/அரசியல்/எஸ்.ரகுபதி தேர்தல் வெற்றி: உச்சநீதிமன்றத்தில் மனு தள்ளுபடி
அரசியல்

எஸ்.ரகுபதி தேர்தல் வெற்றி: உச்சநீதிமன்றத்தில் மனு தள்ளுபடி

🕒 7 அக்., 2026, 09:51 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
எஸ்.ரகுபதி தேர்தல் வெற்றி: உச்சநீதிமன்றத்தில் மனு தள்ளுபடி
✨

AI Highlights

  • •புதுக்கோட்டை திருமயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ எஸ்.ரகுபதியின் தேர்தல் வெற்றியை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

2026-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருமயம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.ரகுபதி, 1,492 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டன. இதில், திருமயம் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் பொன்.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த தேர்தல் மனு, மனுதாரர் நேரில் ஆஜராகி தாக்கல் செய்யாமல் வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்திருந்ததால், சென்னை உயர்நீதிமன்றத்தால் விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி தள்ளுபடி செய்யப்பட்டது.மேலும், தேர்தலில் ரகுபதியை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் சி.சிந்தாமணியும் அவரது வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ரகுபதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ரகுபதியின் மனுவை ஏற்றுக்கொண்டு, சிந்தாமணி தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை நீதிபதிகள் பிரசாந்த்குமார் மற்றும் ஸ்ரீசந்திரசேகர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்நிலையில், மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் திருமயம் தொகுதியில் எஸ்.ரகுபதியின் தேர்தல் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டிலும் நிவாரணம் கிடைக்கவில்லை.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔