சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/திராவிடர் கழகத்தை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது – கி. வீரமணி பேச்சு
அரசியல்

திராவிடர் கழகத்தை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது – கி. வீரமணி பேச்சு

🕒 21 ஆக., 2026, 04:10 AM
⏱️ 3 நிமிடம் வாசிப்பு
திராவிடர் கழகத்தை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது – கி. வீரமணி பேச்சு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திராவிடர் கழகம் சார்பில் எதிர் நீச்சலில் வென்ற பெரியார் 80 வது ஆண்டு விழாவை முன்னிட்டு பெரியார் உலகம் நிதி வழங்கும் விழா மற்றும் திறந்து வெளி மாநாடு நடைபெற்றது. தென்காசி சாலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சி தலைவருக்கு கி. வீரமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரிடம் விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ரூ. 35 லட்சம் நிதி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கி வீரமணி பேசும் போது, எந்தக் கொம்பனாலும் இந்த இயக்கத்தை அழித்துவிட முடியாது. இது திராவிடக் கழகமானாலும், திராவிட முன்னேற்றக் கழகமானாலும் எதிர்நீச்சலிலேயே வரக்கூடியது. நெருப்பாற்றலிலே நீந்தி வெற்றி பெறக்கூடியது. எதிரி மலைகளானாலும் அதைக் கண்டு அஞ்சாமல், அதையே உணரக்கூடிய ஒரு வாய்ப்பு, எதிர்க்கக்கூடிய ஒரு துணிவு அன்றும் உண்டு, என்றும் உண்டு, என்றென்றும் உண்டு, என்றுமே உண்டு. அந்த நீட் தேர்வு எத்தனை பிள்ளைகள் கொடுமையாகியிருக்காங்க... எத்தனை பிள்ளைகள், 100 சாவுக்கு மேலே ஆயிருக்கு. அனிதாவில தொடங்கி எங்கள் பிள்ளைகளுடைய உயிர்... எதிர்காலத்துல டாக்டராகணும்னு நினைச்சா அது என்ன தேசிய குற்றமா? ஆனால் இன்றைய ஆட்சியிலே, காவி ஆட்சியிலே, மிகப்பெரிய அளவுக்கு, மிகப்பெரிய அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். ஆட்சியிலே என்ன காரணம்? ஒரே ஒரு காரணம்தான். மனுதர்மம். இந்த மனுதர்மம்தான் இவ்வளவு கொடுமைகளுக்கு காரணம். சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக் கூடாது. அதை எதிர்த்துத்தானே இந்த இயக்கம்? பெரியார் பிறந்திருக்காவிட்டால் இத்தனை பேர் படித்திருக்க முடியுமா? இந்த இயக்கம் இல்லை என்றால் பாதுகாப்பு இல்லை. எப்படி ஒரு ஊருக்கு காவல் நிலையம் முக்கியமோ, எப்படி நமக்கெல்லாம் காவல்துறை மிக முக்கியம். நம்மைப் பாதுகாப்பது முக்கியமோ, அதே மாதிரி தீயணைப்பு நிலையம் அதுபோல மருத்துவமனை எப்படி முக்கியமோ அதுபோல திராவிடக் கழகம் மருத்துவமனை மூடநம்பிக்கைகளுக்கெல்லாம், ஜாதிக்கெல்லாம். அதேமாதிரி எங்கேயாவது ஜாதிக் கலவரமா, ஆணவக்கொலையா? கண்டிக்கக்கூடிய, எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு காவல்துறை. கருப்புச் சட்டைக்காரன் காவலுக்கு கெட்டிக்காரன். எங்களை எதிர்க்கிறவர்களுக்குச் சேர்ந்துதான். பா.ஜ.க.க்காரர்கள் அல்லது ஆர்.எஸ்.எஸ்.ல தெரிந்தோ தெரியாமலோ போயிருக்கிற தமிழர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்குச் சேர்த்துக் கூறுகிறேன். உங்க பிள்ளைகளுக்காகவும் சேர்த்து டாக்டராகணும்ங்கறதுக்காகத்தான் நாங்க வேலை செய்யறோம். வெறும் எங்க கட்சிக்காரர்களுக்காக அல்ல. நன்றாக நினைத்துப் பார்க்க வேண்டும். சமஸ்கிருதம் படிக்கிறவங்க மட்டும்தான் மனு போட முடியும்னு சொன்னாங்க. சமஸ்கிருதத்தை பார்ப்பனர், உயர்ஜாதிக்காரன் மட்டும்தான் படிக்கணும் என்றால் சமஸ்கிருதம் படிக்கிறவன் மட்டும்தான் மனு போட முடியும்... சமஸ்கிருதம் தெரிஞ்சவன். சமஸ்கிருதத்தை எல்லாரும் படிக்கக் கூடாது, பார்ப்பனன் படிக்கணும். அப்படின்னா என்ன, பார்ப்பனன் மட்டும்தானே டாக்டராகணும்னுதானே அர்த்தம்? இதை எதிர்த்து பெரியார் குரல்கொடுத்து, நீதிக்கட்சி திராவிட ஆட்சி அன்னைக்கு கலைச்சது. இதுதான் இன்னைக்கு நடக்குது. இதுதான்... இந்த மனுதர்மத்தை அரசியல் சட்டமாக்கணும்னுதான் அம்பேத்கர் போட்ட சட்டத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, அதை வரணும்கிறதுதான் இப்போதைய திட்டம். அடுத்து பல திட்டங்களை வைத்திருக்கிறார்கள். பாராளுமன்றத்திலே மிக முக்கியமா அடுத்த திட்டம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பக்கம் தங்களுக்கு வரணும். அதுக்காகத்தான் தொகுதி வரையறை, அது இதுன்னு ஒரு தந்திரங்களை உண்டாக்குறாங்க. அரசியல் சட்டத்திலேயே இதற்கு இடம் கிடையாது. அரசியல் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டுத்தான் இந்த நீட் தேர்வு, முகவை. தேர்வு முகவை இந்தியாவில தனியாக நடத்துவதற்கு அதிகாரமே ஒன்றிய அரசுக்குக் கிடையாது. ஒன்றிய அரசுக்கு அரசியல் சட்டம் அந்த அதிகாரத்தை வழங்கவில்லை. வழங்காத ஒரு அரசியல் சட்ட உரிமையை இன்றைக்கு எடுத்துக்கொண்டு, இந்திய மாணவர்களுடைய எதிர்காலத்தையே குப்பைத் தொட்டியாக்கிக் கொண்டிருக்கிறது, நாசப்படுத்திக் கொண்டிருக்கிறது இந்த ஒன்றிய அரசு. அதற்கு உச்ச நீதிமன்றம் தெரிந்தோ தெரியாமலோ, புரிந்தோ புரியாமலோ, உயர்ஜாதி ஆதிக்கம் இருக்கிற காரணத்தினால், அவர்கள் 'நாங்களும் இதுல சேர்ந்து செய்வோம், சரிப்படுத்துவோம், சரிப்படுத்துவோம் என்கிறார்கள். அதிகாரமில்லாத இடத்தில் என்ன சரிப்படுத்துறது. தேர்வு நடத்தும் உரிமை பல்கலைக்கழகங்களுக்கு மட்டும்தான் உண்டு. பல்கலைக்கழகங்களை அமைக்கும் உரிமை மாநில அரசாங்கங்களுக்கு மட்டும்தான் உண்டு. அதையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு சட்டத்தை மதிக்கவில்லை. மக்களை மதிக்கவில்லை. மக்களுடைய உணர்வுகளை மதிக்கவில்லை. மாணவர்களை மதிக்கவில்லை.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔