சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 88-வது பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 88-வது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அன்னதான நிகழ்வுகளையும் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சிவகாசியில் உள்ள அன்பு முதியோர் காப்பகத்தில் பாமக மாவட்டச் செயலாளர் செல்வம் தலைமையில் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
உணவருந்திய முதியோர்கள் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நீடூழி வாழ வாழ்த்தி, தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பாமக மாநகரச் செயலாளர் காளீஸ்வரன், தேர்தல் பணிக்குழுத் தலைவர் சக்தீஸ்வரன், மாவட்டத் துணைச் செயலாளர் ஜேம்ஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் மகேஷ், விக்னேஷ், அருண், சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

