சந்தை நேரலை
NIFTY 5023,976.65▲ 0.88%
22K Gold₹6,717/gm▲ 0.79%
24K Gold₹7,333/gm▲ 0.79%
Silver₹83,041/kg▲ 1.66%
Petrol₹100.75/L
Diesel₹92.34/L
LPG₹818.50/cyl
Crude Oil$84.08/bbl▼ 5.86%
USD/INR₹83.95▲ 0.14%
E-Paperநேரலை தொலைக்காட்சிEmergencyBloodQuizPollsMarketForums🛡️ Fact Check📚 TNO Wiki📣 பொதுமக்கள் செய்திReporter Login
Sign In
LIVE SCORE

Settings

முகப்பு/அரசியல்/ராஜபாளையத்தில் 'விஜய் விஜயம்' என்ற புதிய செயலியை சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிமுகம் செய்து வைத்தார்.
அரசியல்

ராஜபாளையத்தில் 'விஜய் விஜயம்' என்ற புதிய செயலியை சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிமுகம் செய்து வைத்தார்.

🕒 25 ஜூலை, 2026, 09:57 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ராஜபாளையத்தில் 'விஜய் விஜயம்' என்ற புதிய செயலியை சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிமுகம் செய்து வைத்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

​முன்னதாக, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரமாண்ட விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் சிலம்பாட்ட நிகழ்வை அமைச்சர் தொடங்கி வைத்தார். ஊர்வலம் காந்தி சிலையில் தொடங்கி தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மண்டபத்தை வந்தடைந்தது. ​அங்கு வந்த அமைச்சர், மேடைக்குச் செல்லாமல் மக்களோடு மக்களாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அமைச்சரின் வாழ்க்கைப் பயணத்தைக் கூறும் 'செயற்கை நுண்ணறிவு' (AI) குறும்படம் திரையிடப்பட்டது. தனி ஒரு பெண்ணாக இருந்து, பல சவால்களைக் கடந்து 3 பெண் குழந்தைகளையும் வளர்த்து, பத்திரிகை மற்றும் விளம்பரத் துறையில் சாதித்த தன் பழைய கதையைக் கண்ட அமைச்சர், மக்கள் மத்தியிலேயே உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுதார். உடனடியாகப் பொதுமக்கள் அவருக்கு ஆறுதல் கூறி தைரியமளித்து மேடைக்கு அனுப்பி வைத்தனர். ​தொடர்ந்து, மேடையில் குத்துவிளக்கேற்றி ராஜபாளையம் தொகுதி மக்களுக்காக 'விஜய் விஜயம்' செயலியை அமைச்சர் அறிமுகம் செய்தார். இதன் மூலம் குடிநீர், கழிவுநீர், சுகாதாரம் சார்ந்த புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவின் நிறைவாக சாதனைப் பெண்களுக்குக் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔