எஸ் பி வேலுமணி கட்சியில் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களை இணைக்க வேண்டும் என பேசுகிறார் கேட்ட கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி அவருக்கும் உள்ள நெருக்கம் அரசியல் வல்லுநர்களுக்குத் தெரியும். கேள்வியை அவர் நேரடியாக அவரிடம் கூட கேட்கலாம். யார் வந்தாலும் இணைத்துக்கொள்ளும் பக்குவத்தைப் பெற்றவர் பொதுச்செயலாளர் அவர். அதிமுகவின் 55-வது தொடக்க விழாவை முன்னிட்டு, சிவகாசியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி அதிமுகவின் கொடியேற்றி, பொதுமக்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இனிப்புகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது: கட்சித் தொடங்கி 1972 அக்டோபர் 17 அன்று அனைத்து இந்திய அதிமுகவை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும், உழைப்பாளிகள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் மேன்மை அடைய வேண்டும் என்பதற்காகவும் எம்.ஜி.ஆர் தொடங்கினார். எளிய மக்களின் வலியை உணர்ந்து உருவாக்கப்பட்ட இக்கழகம், இன்று 54 வருடங்கள் முடிவடைந்து 55-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, விருதுநகர் மேற்கு மாவட்டக் கழக அலுவலகத்தில் கொடியேற்றி, புதிய நிர்வாகிகளையும் ஜென்சி (Gen-Z) இளைஞர்களையும் கட்சியில் இணைத்து இவ்விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுக 31 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆளுமை செய்த மரியாதைக்குரிய கட்சியாகும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் காலத்திலும் ஏழை மக்களுக்கான திட்டங்களைத் தீட்டி, அதிகார வர்க்கத்திடமிருந்த அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து ஏழை மக்களை வாழவைத்த இயக்கம் அதிமுக மட்டுமே. கிராமப்புற மக்களுடைய நெஞ்சங்களில் நிலைத்திருக்கும் இரட்டை இலைச் சின்னத்தைக் கொண்ட இக்கழகத்தை அழிக்க நினைத்தவர்களும், ஒழிக்க நினைத்தவர்களும் அழிந்து போயிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஒரு வலுவான தலைமையைத் தந்து, மீண்டும் ஆட்சியைப் கைப்பற்றி மக்களின் கனவுகளை நிறைவேற்றும். எஸ் பி வேலுமணி கட்சியில் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களை இணைக்க வேண்டும் என பேசுகிறார் கேட்ட கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி அவருக்கும் உள்ள நெருக்கம் அரசியல் வல்லுநர்களுக்குத் தெரியும். கேள்வியை அவர் நேரடியாக அவரிடம் கூட கேட்கலாம். யார் வந்தாலும் இணைத்துக்கொள்ளும் பக்குவத்தைப் பெற்றவர் பொதுச்செயலாளர் அவர். இயக்கத்தின் வளர்ச்சிக்கு யார் உதவினாலும் அவர்களை இணைக்கும் பணியை அவர் எடுத்து வருகிறார். நல்ல கருத்துக்களை இந்த நேரத்தில் ஏற்றுக்கொள்வோம். உயரக அரிசியை விளம்பரத்திற்காகச் சாப்பிடுகிறார்கள் என்று அமைச்சர் கூறுவது, விலைவாசி உயர்ந்துவிட்டதை மறைப்பதற்காகச் சொல்லப்படும் இட்டுக்கட்டிய கதையாகும். பொன்னி அரிசி சாப்பிடக்கூடிய அளவுக்கு கிராமப்புற மக்கள் கூட உயர்ந்திருக்கும் நிலையில், அவர்களை மீண்டும் கற்காலத்திற்கு அனுப்புவது போன்ற அமைச்சரின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சியில் 18 முதல் 21 ரூபாய்க்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டபோது ஊழல் என்று கூறியவர்கள், தற்போது ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய்க்கு வாங்குவது எந்த வகையில் நியாயம்? இது தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும். அதிமுகவில் யார் இணைந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் பொதுச் செயலாளர் உள்ளார். தனுஷ் ஒரு முன்னணி நடிகர், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் நடித்த காட்சிகள் இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அப்படிப்பட்ட நடிகர்கள் எங்கள் இயக்கத்திற்கு வந்தால் இருகரம் கூப்பி வரவேற்போம். வதந்தியா உண்மையா என்பது காலம்தான் பதில் சொல்லும். நடிகர்கள் அரசியலுக்கு வரலாம்; ஆனால் அரசியலில் நடிக்கக்கூடாது. எம்.ஜி.ஆர் நடிகராக இருந்தபோதே அரசியல் பயின்று, பல்வேறு பதவிகளை வகித்து, மக்களுக்குத் தொண்டு செய்து வளர்ந்தவர். அரசியலுக்கு வருவதற்கு முன்பே 1952-ல் மிகப்பெரிய வெள்ளத்தின்போது ரிக்க்ஷா தொழிலாளர்களுக்கு ரெயின் கோட் வாங்கித் தந்து கொடைவள்ளலாகத் திகழ்ந்தவர் அவர். இன்றைக்குச் சினிமாவில் நடிப்பவர்கள் அரசியலிலும் நடிப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு போதைப்பொருளை ஒழிப்பதாகச் சொன்னார்கள். ஆனால், தற்போது போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதில் தவெக நிர்வாகிகளே கைது செய்யப்பட்டுள்ளனர். கட்சி பாகுபாடின்றி கடுமையான நடவடிக்கை எடுத்து போதை இல்லாத தமிழகத்தை அரசு உருவாக்க வேண்டும். அதிமுகவை லெட்டர்பேட் கட்சியாக மாற்றிவிட்டதாகவும், திமுகவிடம் அடமானம் வைக்க முயன்றதாகவும் கூறுவதில் உண்மையில்லை. திமுகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றவர்களை கட்சியிலிருந்து பிரிந்து ஆட்சி அமைத்தவர்கள் இதைப் பற்றி பேசக்கூடாது. அதிமுக தனித்த சாம்ராஜ்யம், கொள்கை இயக்கம். நாங்கள் யாருடனும் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. தனிப்பெரும்பான்மையோடு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும். சிவகாசி பட்டாசுத் தொழிலுக்கான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு அடித்தளமிட்டது அதிமுக அரசுதான். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது உற்பத்தியாளர்களை அழைத்துச் சென்று, அரசின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து அட்வகேட் ஜெனரலை வைத்து ஆதரவான வாதங்களை முன்வைத்ததால்தான் இன்று தீர்ப்பு நமக்கு வந்துள்ளது. அதற்கு நானும் ஒரு கருவியாகப் பயன்பட்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அரசியல்
அதிமுகவிற்கு யார் வந்தாலும் ஓகே! பொதுச்செயலாளர் பக்குவம் குறித்து மனம் திறந்த முன்னாள் அமைச்சர்!
🕒 17 அக்., 2026, 10:22 AM
⏱️ 3 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •அதிமுகவிற்காக உழைக்கின்றவர்கள் யார் வந்தாலும் அவர்களை கட்சியில் இணைத்துக்கொள்ளும் மனநிலையில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி!
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
