Settings

முகப்பு/அரசியல்/விஜய் குறித்து அதிமுக பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் கோபி காளிதாஸ் கடும் விமர்சனம்
அரசியல்

விஜய் குறித்து அதிமுக பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் கோபி காளிதாஸ் கடும் விமர்சனம்

🕒 22 அக்., 2026, 04:59 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விஜய் குறித்து அதிமுக பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் கோபி காளிதாஸ் கடும் விமர்சனம்
✨

AI Highlights

  • •கரூர் மாவட்டம் குளித்தலையில் நடைபெற்ற அதிமுக 55-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில், தவெக தலைவர் விஜய்யை எதிர்த்து அதிமுக பேச்சாளர் கோபி காளிதாஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த தோகைமலையில் நடைபெற்ற அதிமுக 55-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில், அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி காளிதாஸ் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

தோகைமலை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, தோகைமலை கிழக்கு ஒன்றியச் செயலாளர் சந்திரசேகர், மேற்கு ஒன்றியச் செயலாளர் ராமச்சந்திரன், தெற்கு ஒன்றியச் செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் கொள்கை பரப்புத் துணைச் செயலாளரும், தலைமைக் கழகப் பேச்சாளருமான கோபி காளிதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் பேசிய கோபி காளிதாஸ், சினிமா உச்சத்தை விட்டுவிட்டு வந்ததாகக் கூறும் விஜய், பல்லாயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளதாகப் பகிரங்கக் குற்றம் சுமத்தினார். மேலும், காய்கறி வாங்கும்போதே தரம் பார்த்து வாங்கும் பொதுமக்கள், தங்களை ஐந்தாண்டுகள் ஆளப்போகும் தலைவர் யார் என்பதைத் சிந்திக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசையும், தவெக தலைவர் விஜய்யையும் கடுமையாகச் சாடியதுடன், தற்போதைய விலைவாசி உயர்வு குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔