விருதுநகரில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான சுமார் 800 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி தேசிய திருக்கோவில் கூட்டமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாவட்டத் தலைவர் சத்தியேந்திரன் மற்றும் மாநிலச் செயலாளர் சதீஷ்கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உணவருந்தினர். தொடர்ந்து சிவபெருமானை வழிபட்டு அருள்பெற்றுச் சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் தேசிய திருக்கோவில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பாலவிக்னேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

