திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் அருகே கே.கள்ளிக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மீசா சட்டம், திருச்சியை இரண்டாம் தலைநகரமாக அறிவிப்பது, பரந்தூர் விமான நிலையம், பட்டினப்பாக்கம் திட்டம் மற்றும் தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.
மீசா விவகாரம்
மீசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்படுவது தொடர்பாக பேசிய துரை வைகோ, ஏற்கனவே முடிவடைந்த விவகாரத்தை மீண்டும் மீண்டும் கேள்வியாக எழுப்புவதால் அது தொடர்ச்சியான நிகழ்வாக மாறுகிறது என்றும், இதற்கு பத்திரிகைத் துறை நண்பர்களே காரணம் என்றும் தெரிவித்தார்.
1975 முதல் 1977 வரை நடைபெற்ற அவசரநிலை காலத்தில் அப்போதைய காங்கிரஸ் அரசு, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் மீசா சட்டத்தை கொண்டு வந்ததாகவும், அந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் பல்வேறு கைது நடவடிக்கைகள் நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.
அரசியல் காரணங்களுக்காக மட்டுமின்றி, பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் மீசா சட்டத்தின் கீழ் முதலில் கைது செய்யப்பட்டவரும், கடைசியாக விடுதலை செய்யப்பட்டவரும் வைகோதான் எனக் குறிப்பிட்ட அவர், அப்போது திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் அரசியல் நாகரிகம் கருதி தனிநபர் தாக்கு

