சைபர் குற்றங்களை தடுக்க தீவிர கண்காணிப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கொலை மற்றும் போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளதுடன், சைபர் மோசடிகளை தடுக்கவும், போதைப்பொருள் விற்பனையை ஒழிக்கவும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது எனினும் முன் விரோத கொலைகள் ரவுடிகள் தொடர்பான கொலைகள் குறைந்துள்ளது என நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் நெல்லை மாவட்ட எஸ்.பி விசுவேஸ் பாசாஸ்திரி தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது சமீபத்தில் மூன்று சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனையும், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் பெற்றுத்தரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 25 கொலை வழக்குகளில் 118 பேருக்கும், 28 போக்சோ வழக்குகளிலும் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது குற்றச் சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்க. பள்ளி மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டுள்ளது குற்றச்சன்பங்களை ஈடுபட்ட 54 சிறுவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளி நீதிமன்றம் முன்பு ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர் மாணவ மாணவர்களிடையேயான மோதல் தொடர்பாக மூன்று முதல் தகவல் அறிக்கைகளும் 15 மனு ரசீதும் (CSR) போடப்பட்டுள்ளது மாவட்டத்தில் இந்த ஆண்டு 19 போக்ஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது 103 பேர் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது செய்யப்பட்டுள்ளனர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 339 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மொத்தமாக 1410 ரவுடிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டு அதில் 587 நபர்களுக்கு கைரேகை கண்விழி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். ரூ.5.8 கோடி சைபர் மோசடி சைபர் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இதுவரை 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மோசடிகளில் பொதுமக்கள் சுமார் ரூ.5 கோடியே 80 லட்சம் பணத்தை இழந்துள்ளனர். போலீசாரின் உடனடி நடவடிக்கையால் ரூ.51 லட்சத்து 50 ஆயிரம் வங்கி கணக்குகளில் முடக்கப்பட்டுள்ளதுடன், அதில் ரூ.26 லட்சம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் அரஸ்ட், ஆன்லைன் முதலீடு உள்ளிட்ட மோசடிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால் உடனடியாக 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும் நெல்லை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 90.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரின் வங்கி கணக்குகளை முடக்குவதுடன், அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதனிடையே, வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 14, 15, 16 ஆகிய தேதிகளில் சிலைகள் வைக்கப்பட்டு, 20 மற்றும் 21ஆம் தேதிகளில் ஊர்வலம் நடைபெற உள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது எனினும், பழிவாங்கும் கொலைகள் மற்றும் ரவுடி தொடர்பான கொலைகள் குறைந்துள்ளது
செய்திகள்
ரூ.5.8 கோடி சைபர் மோசடி; 90.5 கிலோ கஞ்சா பறிமுதல் – 152 பேர் கைது!
🕒 12 செப்., 2026, 09:59 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •நெல்லையில் ரூ.5.8 கோடி சைபர் மோசடி; 90.5 கிலோ கஞ்சா பறிமுதல் –152 பேர் கைது! கடந்த ஆண்டை விட கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பா சாஸ்திரி பேட்டி
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
