நெல்லை மாவட்டம் காவல் கிணறு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (32), இவர் நேற்று 20.08.2026 மாலை மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்தாக கூறப்படுகிறது . இந்த நிலையில் ரமேஷ்குமார் மது அருந்தி உள்ளாரா என்பதை சோதனை செய்வதற்காக, கூடங்குளம் காவல் நிலைய தலைமை காவலர் சிவகுமார் மற்றும் காவலர் வேல்துரை ஆகியோர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். காவல் நிலைய வளாகத்தில் ரமேஷ்குமாரை நிறுத்திவிட்டு, போதை கண்டறியும் சோதனை இயந்திரத்தை எடுப்பதற்காக இரு காவலர்களும் நிலையத்திற்குள் சென்றுள்ளனர். இந்த இடைவெளியில், ரமேஷ்குமார் தனது பையில் வைத்திருந்த சுமார் 10 மி.லி. அளவிலான பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து திடீரென குடித்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவலர்கள், உடனடியாக அவரை மீட்டு கூடங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் விசாரணை மேற்கொண்டு பணியில் கவனக்குறைவாக இருந்ததாக, தலைமை காவலர் சிவகுமார் மற்றும் காவலர் வேல்துரை ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செய்திகள்
கூடங்குளம் காவல் நிலையத்தில் பரபரப்பு: பூச்சிக்கொல்லி குடித்த வாலிபர் சம்பவம்; 2 போலீசார் சஸ்பெண்ட்
🕒 21 ஆக., 2026, 11:31 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
