Settings

முகப்பு/செய்திகள்/பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய களமிறங்கிய சிங்கப்பெண் அதிரடிப்படை!
செய்திகள்

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய களமிறங்கிய சிங்கப்பெண் அதிரடிப்படை!

🕒 27 அக்., 2026, 12:57 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய களமிறங்கிய சிங்கப்பெண் அதிரடிப்படை!
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புத்துக்கோவில் பேருந்து நிலையத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பேருந்து நிலையத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரே அவர்களின் வழிகாட்டுதலின்பேரில், பொதுமக்களுக்கும் மாணவ, மாணவிகளுக்கும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்நிகழ்வில், அப்பகுதியில் திரண்டிருந்த பொதுமக்களிடம் பெண்கள் பாதுகாப்பு, அவசர உதவி எண்கள் மற்றும் சட்டப்பாதுகாப்புகள் குறித்து காவல்துறையினர் விளக்கினர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔