திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே காணாமல் போன மூன்று பள்ளி மாணவிகளையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த அவர்களை, காவல்துறையினர் திங்கட்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் மீட்டனர்.
தண்டராம்பட்டு காவல் உதவி கண்காணிப்பாளர் (ASP) தலைமையிலான காவல் அதிகாரிகள் இந்த மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். மீட்கப்பட்ட மாணவிகள் அனைவரும் தண்டராம்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் வரப்பட்டு, அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

