செந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நடத்தப்பட்டது.
கால்நடைத் துறை இணை இயக்குநர் ரவிச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, உதவி மருத்துவர் குமரேசன் தலைமையில் இந்த முகாம் நடைபெற்றது. செந்துறை, குரும்பபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த முகாமானது, ஊராட்சி செயலர் கருப்பையா அவர்களின் மேற்பார்வையில், துப்புரவு காவலர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.
முகாமின் போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த சமூக நாய்கள் வலைகள் மூலம் பாதுகாப்பாக பிடிக்கப்பட்டு, அவற்றுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இப்பணியின் மூலம் மொத்தம் 35 சமூக நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

