Settings

முகப்பு/செய்திகள்/சாலை வசதி கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா போராட்டம்!
செய்திகள்

சாலை வசதி கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா போராட்டம்!

🕒 26 அக்., 2026, 09:18 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சாலை வசதி கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா போராட்டம்!
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே முறையான சாலை வசதி கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கிரிசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட தென்னந்தோப்பு பகுதியில் முறையான சாலை வசதி கோரி பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அன்றாடம் சென்று வருவதற்கு முறையான பொதுச் சாலை வசதி இல்லாததால், மழைக்காலங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, பள்ளி மாணவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருவதாகவும், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணக் கோரி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, அப்பகுதியில் உள்ள தனியார் நிலத்தின் உரிமையாளர் ஒருவர் ஜேசிபி இயந்திரம் மூலம் வரப்பு பாதையை அகற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்து மேலும் முடங்கியுள்ளது.

இந்த நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள், ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திருப்பத்தூர் நகர போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔