கோவையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கரும்புக்கடை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், மெத்தபெட்டமைன், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, கைது செய்யப்பட்டுள்ள நபர்களிடமிருந்து 8 கிராம் மெத்தபெட்டமைன், 500 கிராம் கஞ்சா மற்றும் 220 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், போதைப்பொருள் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு டிஜிட்டல் எடை இயந்திரம் மற்றும் செல்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சட்டப்பூர்வ நடவடிக்கையாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவையில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தக் காவல் துறையினர் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

