நவராத்திரியில் முப்பெருந்தேவிகளின் பூஜைகள் முடிந்த பின்பு, 10-வது நாளன்று குழந்தைகள் கல்வி கற்க தொடங்கும் புனித நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பார்கள். மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், பாட்டு, இசைக் கருவிகள், நடனம் ஆகிய பயிற்சிகள், பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்குவதும் வழக்கம். அதன்படி இன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் சரஸ்வதி அம்பாள் கோவில் தஞ்சாவூரில் மற்றும் நெல்லையில் அமைந்துள்ளது. அருள்மிகு நெல்லையப்பர் கோவில் அம்பாள் சன்னதி அருகே அமைந்துள்ள சரஸ்வதி அம்பாள் திருக்கோவில் சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்ததாகும். சிறப்பாக தஞ்சாவூரில் உள்ள திருக்கோயிலில் அம்பாள் கையில் வீணையும் நெல்லையில் உள்ள அம்பாளின் கையில் ஏடுடன் அருள்பாலிக்கின்றாா்.
விஜயதசமியை முன்னிட்டு அதிகாலை திருக்கோவில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வெண் பட்டுக்கட்டி மலா்மாலைகளால் சிறப்பு அலங்காரத்தில் எழுந்துருளிய சரஸ்வதி அம்மனுக்கு சோடச உபசரனைகள் நடத்தப்பட்டது. அதனை தொடா்ந்து வித்யாரம்ம் ஆரம்பமாயிற்று. சுப ஓரையில் சரஸ்வதி அம்பாள் முன்னதாக புரோகிதர் மந்திரம் முழங்க தமிழின் முதல் எழுத்தான “அ” என்ற சொல்லை பச்சரிசியில் மஞ்சள் துண்டு மூலம் மாதா பிதா குரு வரிசையில் தாயுடன் தந்தையும் வந்திருந்து தங்களது மடியில் குழந்தைகளை அமர்த்தி எழுத வைத்தனா். இதனால் தங்களது குழந்தைகள் கல்வியில் எதிர்காலத்தில் சிறந்து விளங்கும் என்று பெற்றோர்கள் நம்புகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோவிலில் தங்கள் கல்வியினை தொடங்கியவர்கள் இன்று உயர்ந்த நிலையில் உள்ளதாதாகவும் கோவிலுக்கு வந்திருந்தவர்கள் தெரிவித்தனர். காலை முதலே தங்கள் குழந்தைகளுடன் சரஸ்வதி கோவிலுக்கு வந்திருந்து எழுத்து பயிற்ச்சியை ஆரம்பித்தனா்.

